100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான்!

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 11:38 am
100-vote-awareness

கும்பகோணத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

கும்பகோணத்தில்  கிங்ஸ் ரோட்டரி சங்கம், சிட்டி யூனியன் வங்கி அரசு என்ஜினீயரிங் கல்லூரி சீமாட்டி சில்க் ஆகியவை சார்பில், 100% வாக்களிக்க வேண்டும், நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இதனை அதிமுக முன்னாள் நகர செயலாளர் பி எஸ் சேகர், ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் பாபு ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

கும்பேஸ்வரர் கோவில் அருகே தொடங்கிய சைக்கிள் மாரத்தான்,  மகாமக குளம், ரயில் நிலையம், செட்டி மண்டபம் வழியாக சிறிய மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் முதல்பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close