சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தபால் வாக்குபதிவு!

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 12:00 pm
postal-polling-in-chennai

சென்னையில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள 3,770 வாக்குச் சாவடிகளில், 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் 16 ஆயிரம் காவல்துறையினர் என மொத்தம் 36 ஆயிரம் பேர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கான இரண்டு கட்ட தேர்தல் பயிற்சிகள், 16 பயிற்சி மையங்களிலும் நடைபெற்று வருகிறது. 

இப்பயிற்சியில் பங்கேற்று வரும், தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆயிரத்து 323 காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டு இன்று வாக்களிக்கவுள்ளனர்.

மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, அண்ணா நகர் மற்றும் துறைமுகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு எழும்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் நடத்து அதிகாரிகள் தாமதத்தால் காலை 9 மணிக்கே வாக்குப்பதிவு துவங்கியது.

அதேபோன்று வட சென்னையில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலை பள்ளியிலும், தென் சென்னையில் நந்தனம் ஆண்கள் கலை கல்லூரியிலும் தபால் வாக்குப்பதிவு கால தாமதமாகவே நடைபெற்று வருகிறது. இந்த தபால் வாக்குப்பதிவானது இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close