திமுக ஹீரோ, காங்கிரஸ் சூப்பர் ஹீரோ, பா.ஜக. ஜீரோ: மு.க.ஸ்டாலின்

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 12:47 pm
dmk-hero-congress-super-hero-bjp-zero-mk-stalin

திமுக ஹீரோ, காங்கிரஸ் சூப்பர் ஹீரோ, பா.ஜக. ஜீரோ என அதிமுக கூட்டணி கொள்ளை கூட்டணி, திமுக கொள்கை கூட்டணி.

திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், வெயிலின் கொடுமையை விட ஆட்சியின் கொடுமை தாங்க முடியவில்லை. இந்த ஆட்சிக்கு விடை கொடுக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி. இது திமுகவின் அடிப்படை கொள்கை. திராவிட இயக்கத்தின் எண்ணங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த தேர்தலில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஓட்டு கேட்கும் போது விரட்டி விரட்டி துரத்துகிறார்கள். அன்புமணி ராமதாஸ் ஓட்டு கேட்கும் போது அதிமுக தொண்டர்கள் கேள்வி கேட்கின்றனர். நான் ஆதாரத்தோடு சொல்லுகிறேன். இதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யும் போது செருப்பு வீசி உள்ளனர். இதையெல்லாம் தாங்கி கொள்ள முடியாத முதலமைச்சர் கோவத்தின் உச்சியில் ஏதேதோ பேசி வருகிறார்.

திமுக ஹீரோ, காங்கிரஸ் சூப்பர் ஹீரோ, பா.ஜக. ஜீரோ, அதிமுக கூட்டணி கொள்ளை கூட்டணி, திமுக கொள்கை கூட்டணி. பிரதமர் மோடி செய்த ரஃபேல் மெகா ஊழலை வெளிபடுத்தியவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் வருடம் 72 ஆயிரம் எனவும், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

மத்திய அரசுக்கு மாநில அரசு துணைபோகலாம் ஆனால் அடிமையாக தான் இருக்க கூடாது. தமிழக அரசு தற்போது அடிமையாக இருக்கிறது என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close