வாக்குச்சாவடிகளுக்கு இரு சக்கர நாற்காலிகள் அனுப்பி வைப்பு!

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 01:03 pm
two-wheelchairs-sent-for-polling-stations

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக கொடுக்கப்படும் இரண்டு சக்கர நாற்காலிகளை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி அனுப்பி வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அவர்களுக்கு உதவியாக இரண்டு சக்கர நாற்காலிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 3588 வாக்கு மையங்கள் உள்ளடக்கிய 1169 வளாகங்களில், சக்கர நாற்காலிகள் வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சேலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ஊராட்சிகள் மூலம் 385 ஊராட்சிகளுக்கு 770 இரண்டு சக்கர நாற்காலிகளும், தொண்டு நிறுவனம் மூலமாக 399 என 1169 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று இரண்டு சக்கர நாற்காலிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close