பிளாக்கில் விற்பதற்காக வைத்திருந்த 2,300 மதுபாட்டில்கள் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 01:20 pm
2-300-liquor-bottles-to-be-seized

கும்பகோணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,300 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

மக்களவைத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு வரும் 16ம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நாட்களில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதற்காக காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் கும்பகோணம்  ஸ்ரீராம் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முருகவேல் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார்,  ஸ்ரீராம் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் வீட்டில்  49 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புடைய 2,352 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close