பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பா.ம.க காரணமல்ல: வேட்பாளர் சாம்பால்

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 02:33 pm
not-connection-to-petrol-bombing-pmk-candidate

திமுக பிரமுகர் பரமசிவம் இல்லத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பாமக காரணமல்ல எனவும், திமுக வேட்பாளர் திரித்துக் கூறுவதாகவும் பாமக வேட்பாளர் சாம்பால் தெரிவித்துள்ளார். 

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் , ஐசிஎப் குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் சாம்பால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக பிரமுகர் பரமசிவம் எனது நீண்ட கால நண்பர் அவரது வீட்டில் குண்டு வீசப்பட்ட விவகாரம் ஆரோக்கியமானது அல்ல.

பரமசிவத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பாமகவினர் தான் காரணம் என திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்த கருத்து தவறானது. பாமக விற்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்தல் ஆதாயத்திற்காக திமுகவினரே குண்டு வீசிவிட்டு தங்கள் மீது பழியை சுமத்துகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது அமமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி தொண்டர்களை திமுகவினர் அடித்ததாகவும் அதனால் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதாகவும் காவல் துறை நண்பர்கள் தெரிவித்துள்ளனர் என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close