சாக்கடை கலந்த குடிநீர்: பொதுமக்கள் சாலை மறியல்

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 04:03 pm
sewer-water-mixed-in-drinking-water

சேலத்தில் குடிநீர் சாக்கடை நீருடன் கலந்து வருவதை தடுக்காத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாநகராட்சியில் பாவடி தெரு மற்றும் குமரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேட்டூர் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவிலை என்று கூறி, பொதுமக்கள் பட்டை கோவில் பகுதியில் உள்ள சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாட்டிலில் எடுத்து வந்த குடிநீரை அதிகாரிகளிடம் காண்பித்தனர். இதையடுத்து,  மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் சாக்கடை நீர்  கலந்து இருக்கலாம் எனவும், உடனே எந்த பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என கண்டறிந்து  உடைந்த குடிநீர் குழாயை சரி செய்வதாக உறுதியளித்தனர்.

இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக  சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு நகர பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள்  வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close