வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 04:04 pm
third-phase-training-courses-for-election-work

கோவை நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பயிற்சி மையத்தில் தேர்தல் அலுவலகர்களுக்கான பயிற்சி வகுப்புகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான  மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் 3,070 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், தேர்தல் பணிமேற்கொள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசுப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படும் வகையில், 14,746 நபர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 24-ம் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 7-ம் தேதியும் நடைபெற்றது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் உதவி தேர்தல் அலுவலர் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.    

இதனைத் தொடர்ந்து, இன்று வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை-1 ஆகியோர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு, அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை பொறுத்தவரையில் நியாயமாகவும், முறையாகவும் நடைபெற தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் மற்றும் ஒவ்வொரு பணிகளுக்குமான கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நடமாடும் பறக்கும்படை அலுவலர்கள் மற்றும் நிலையான மேற்பார்வை பறக்கும்படை அலுவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close