ஜெ.மரணத்திற்கு பிறகு ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்துள்ளனர்: திருநாவுக்கரசர்

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 04:53 pm
a-party-for-ones-has-begun-after-jeyalallitha-death-thirunavukkarasar

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்  யார் யாரிடமெல்லாம் பணம் இருந்ததோ அவர்கள் எல்லாம் ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்துள்ளார்கள் என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு பிரதமர் மோடி அரசு என்றும் அகில இந்திய அளவில் மோடி வீழ்த்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வீழ்த்தப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்றும், ஜெயலலிதா மறைவிற்கு பின் யார் யார் கையில் எல்லாம் பணம் இருந்ததோ அவர்கள் எல்லாம் ஒரு கட்சி ஆரம்பித்து விட்டார்கள் என்றும் கூறினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close