சேலத்தில் கறிக்கடை வியாபாரி  சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்

  கண்மணி   | Last Modified : 13 Apr, 2019 06:23 pm
murdered-in-selam

சேலம் அருகே கறிக்கடை வியாபாரி அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் ஆட்டையாம் பட்டியில் உள்ள மாதேஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அறிவுச்செல்வன், கறிகடை வியாபாரியான இவருக்கு பார்வதி என்ற மனைவியும், கருணாஸ், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் அறிவுசெல்வனுக்கு  குடிப்பழக்கம் அதிகம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  இதனால் கடந்த 10 மாதங்களாக  அறிவுச்செல்வனும், அவரது மனைவி பார்வதியும் பிரிந்து வாழ்கின்றனர்.  மேலும்,அறிவு செல்வனுக்கும் நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று, வீட்டிலிருந்த அறிவுச் செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.  அதனையடுத்து, மகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அறிவுச்செல்வனின் தந்தை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக‌ அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது  வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close