ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகருக்கு 2 டன் பழங்களால் அலங்காரம் !

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 12:19 pm
2-tons-of-fruit-decoration-on-biggest-vinayaka-in-asia

கோவை, புலியகுளத்தில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலைக்கு, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையான, கோவை புலியகுளம் முந்தி விநாயகருக்கு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

முன்னதாக, அதிகாலையில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து,  பழங்கள் மற்றும் காய்கறிகளால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. டன் கணக்கில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த விநாயகரை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close