அரசியல் வாழ்க்கை இனிதான் தொடங்குகிறது: முதலமைச்சர்

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 01:40 pm
political-career-start-with-this-election-cm

இந்த தேர்தலுக்கு பிறகுதான் என்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், " இந்த தேர்தலுடன் என் அரசியல் வாழ்க்கை முடிந்து விடாது என்றும், இந்த தேர்தலுக்கு பிறகுதான் என்னுடைய அரசியல் வாழ்க்கை தொடரும் என தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு ஒது போதும் நிறைவேறாது என்றும், மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கூறினார். 

விவசாயத்திற்கு முன்னுரிமை தரும் அரசு அதிமுக அரசு என குறிப்பிட்ட அவர்,  தலைவாசலில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் என்றும் 2 ஆண்டுகளில் சேலம் மாநகரம் மிகப்பெரிய நவீன மாநகராமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close