விவசாயிகளுடன் ஆலோசித்து 8 வழி சாலை திட்டம் நிறைவேற்றப்படும்: நிதின் கட்கரி

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 01:40 pm
8-way-road-project-will-be-implemented-consulting-with-farmers-nitin-gadkari

சேலம் - சென்னை 8 வழி சாலைத் திட்டம் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டாலும், விவசாயிகளுடன் ஆலோசித்து அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் சேலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில், அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறி பேச்சை தொடங்கிய அவர், பல மாநிலங்களில் உபரியாக உள்ள நீரை தேவைப்படும் பிற மாநிலங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

கோதாவரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு பயன்படுத்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூத்தி செய்ய அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், மீண்டும் எங்களை ஆட்சியில் அமர்த்தினால் தண்ணீர் பிரச்னையை முழுவதுமாக தீர்ப்போம் என கூறினார். 

சேலம் - சென்னை 8 வழி சாலைத்திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், இந்த திட்டம் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டாலும், விவசாயிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.  மேலும்,  8 வழி சாலை திட்டத்திற்காக எடுக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close