காட்டூர் மாரியம்மனுக்கு பணத்தால் அலங்காரம்!

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 03:51 pm
money-decoration-for-katoor-mariamman

தமிழ் புத்தாண்டையொட்டி கோவை காட்டூர் மாரியம்மனுக்கு பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு  கோவை காட்டூரில் அமைந்திருக்கும் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு தினத்தில் பணம் மற்றும் நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அம்மனை  தரிசனம் செய்யும் போது அனைத்தும் வளங்களும் கிடைக்கும்  என்ற ஐதீகத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த அலங்காரம் செய்யப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கோவிலின்  முகப்பில் பூக்களால்  அலங்கரிக்கப்பட்டிருந்தது.  

தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு உள்ள சூழலில், கோயிலில் அம்மனுக்கு அலங்காரம் செய்யபப்ட்டு இருந்த மொத்த பணத்தின் மதிப்பை நிர்வாகிகள் கூற மறுத்தனர். இருப்பினும் வருடந்தோறும் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இந்த அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close