அ.தி.மு.க - அ.ம.மு.க.வினரிடையே மோதல்: கழக பொறுப்பாளருக்கு எலும்பு முறிவு!

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 03:41 pm
conflict-between-aiadmk-and-aiadmk

திருச்சியில்  அ.தி.மு.க - அ.ம.மு.கவினரிடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க வட்ட கழக பொறுப்பாளர் கந்தசாமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. 

திருச்சியில் அ.தி.மு.க வின் 38 வது வட்ட பொறுப்பாளராக இருப்பவர் கந்தசாமி. இவர் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் இன்று கே.கே.நகர் அருகே சாத்தனூர் பகுதியில் வாக்கு கேட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அ.ம.மு.கவினர்  செல்லதுரை, மதி, ஆனந்த பிரகாஷ், அழகர் உள்ளிட்டோர் எங்கள் பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பிற்குமிடையே வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டுள்ளது. அப்போது அ.ம.மு.க வினர் அ.தி.மு.க வட்ட பொறுப்பாளர் கந்தசாமியை கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கந்தசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சிகிச்சை பெற்று வரும் கந்தசாமியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close