பிரதமர் யார் என அறிவிக்க முடியாமல் காங்., திணறல்: ஜி.கே.வாசன்

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 03:38 pm
gk-vasan-election-campaign

பிரதமர் யார் என அறிவிக்க முடியாமல் காங்கிரசும், திமுகவும் திணறிக் கொண்டிருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆசைமணியை  ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர்,  தற்போது மத்தியில் உள்ள ஆட்சியால், இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு பாதுகாப்பு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஒரு மெகா கூட்டணி, வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளனர். தமிழக முதல்வர் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் முடிந்தவுடன் தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.2000 வழங்க உள்ளது. இதனால் ரூ.50 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.

100 நாள் வேலை திட்டத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறந்து விளங்குகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கவும் குழந்தை தொழிலாளர்கள் முறையை நீக்கவும் கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளோம்.  பிரதமர் யார் என அறிவிக்க முடியாமல் காங்கிரசும், திமுகவும் திணறிக் கொண்டிருக்கிறது. ஆகவே மக்களே இந்த மெகா கூட்டணியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close