கோவையில் 8 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள்!

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 04:02 pm
8-sample-polling-centers-in-coimbatore

கோவை மக்களவை தொகுதியில் பெண்கள் மட்டுமே பணியாற்றக்கூடிய 6 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் 8 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18 தேதி நடைபெறுகிறது. கோவை மக்களவை தொகுதியின் கீழ் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன.
இந்த ஆறு தொகுதிகளில், ஒவ்வோரு தொகுதியிலும் பெண்கள் மட்டுமே பணியாற்றக்கூடிய வகையில் அனைத்து மகளிர் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளன. அதே போல், மாதிரி வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் மூன்று மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அனைத்து மகளிர் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ள இடங்கள் : 

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கவுண்டம்பாளையம், சூலூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (கண்ணம்பாளையம்), கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (சித்ரா), கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் செயிண்ட் பால் நார்சரி மற்றும் பிரைமரி பள்ளி (ரத்தினபுரி), கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் நிர்மலா கல்லூரி (காமராஜர் சாலை), சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ராமசாமி செட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ஒண்டிப்புதூர்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ள இடங்கள்:

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (ஆராக்குளம்), சூலூர் சட்டமன்ற தொகுதியில் கதிர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி (ஒட்டர்பாளையம்), கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (சித்ரா), கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் செயிண்ட் பால் நார்சரி மற்றும் பிரைமரி பள்ளி (ரத்தினபுரி), கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் நிர்மலா கல்லூரி (காமராஜர் சாலை), அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி (பொன்னே சாலை), சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பெர்க்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி (உப்பிலிபாளையம்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close