வாக்கு சேகரிப்பின் போது, அதிமுக - திமுக இடையே வாக்குவாதம்!

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 04:53 pm
aiadmk-dmk-clash

கும்பகோணம் காமராஜர் சாலையிலுள்ள தூய அலங்காரன்னை தேவாலாயத்தில்  திமுக, அதிமுகவினர் வாக்கு சேகரித்தபோது வாக்கு வாதம் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கமும், அதிமுக வேட்பாளர் ஆசைமணியும் போட்டியிடுகின்றனர். ஞாயிற்று கிழமை என்பதால் ஏராளமான கிறிஸ்துவர்கள் சிறப்பு வழிபாட்டிற்காக  காமராஜர் சாலையிலுள்ள தூய அலங்காரன்னை தேவலாயத்தில் வழிபாடு செய்தனர்

இங்கு வந்துள்ள கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக திமுக சார்பில் நகர செயலாளர் தமிழழகன் தலைமையிலும், அதிமுக வேட்பாளர் ஆசைமணி தலைமையிலும் கிறிஸ்துவ ஆலயம் முன்பு கூடினர். அப்போது வாக்கு சேகரிப்பதில் இரு கட்சியினரிடைய வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. 

 தகவலறிந்து வந்த மேற்கு காவல்துறையினர் திமுகவினரை மட்டும் அனுப்ப  முயன்றனர். ஆனால் திமுகவினர்,  அதிமுகவினரையும் அனுப்பினால் தான் நாங்கள் செல்வோம் என்றனர். இதனால் காவல்துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
பின்னர் காவல்துறை அதிமுகவினரை அனுப்ப முயன்றனர். ஆனால்  அதிமுகவினர் காவல்துறையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரசன்னா, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.  ஆலயப்பகுதிகளில் ஏதேனும் தேர்தல் விதிகளை மீறிய சம்பவங்கள் நடந்ததாக, புகாரளித்தால்  வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close