சென்னையில் இளம் பெண்ணை 15 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காதலனை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னை அடையாறு, மாளவியா 2 அவன்யூவில் உள்ள தனியார் குடியிருப்பில் தன் தோழிகளுடன் தங்கி பணிபுரிந்து வருகிறார் காவியா. இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, வீட்டின் அருகிலேயே மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் அவரை குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவரை தடுக்க முயன்ற போது, பொதுமக்களையும் கற்கள் கொண்டு தாக்கிவிட்டு 15க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு, அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த காவியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கத்தியால் குத்தியது காவியாவின் காதலன் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
newstm.in