நடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது!

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 12:55 pm
suspicion-in-wife-s-behavior-the-husband-murdered-her-wife

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த போக்குவரத்து காவலரை போலீஸார் கைது  செய்தனர். 

சென்னை, பெரம்பூர் செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்நாத் (37). இவர் கொத்தவால்சாவடி போக்குவரத்துப் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும்,  2 குழந்தைகளும் உள்ளனர். அர்ச்சனாவின் நடத்தையில் பிரேம்நாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அது கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்நாத், இரும்பு கம்பியால் மனைவியின் தலையில் அடிக்கவே, அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரேம்நாத், உடனே அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆனால், செல்லும் வழியிலேயே அர்ச்சனா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார் பிரேம்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close