திருச்சி சமயபுரம் கோவில் தேரோட்டம்: இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்!

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 01:58 pm
trichy-samayapuram-temple-festival-transition-from-traffic-today

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேரோட்டத்திற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்  உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவையொட்டி நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 12 மணி  முதல் நாளை மாலை 3 - மணி  வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி வழியாக சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து சேலம் செல்லும்  அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் புறநகர் பேருந்துகளும்  ஜீயபுரம், குளித்தலை, முசிறி வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கனரக வாகனங்களுக்கு மட்டும் மாற்றம்..

திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மணப்பாறையில் இருந்து குளித்தலை,முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்ல வேண்டும்,

மதுரையில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் லஞ்சம் மேடு கைகாட்டியில் இருந்து மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்ல வேண்டும்,

சென்னையிலிருந்து திருச்சி வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் பெரம்பலூர், அரியலூர், லால்குடி வழியாக திருச்சி வரவேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close