மோடி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக நலன் காக்கப்படும்: பிரேமலதா

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 01:56 pm
if-modi-led-coalition-wins-tamil-nadu-will-be-well-guarded-premalatha

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி மீண்டும் பொறுப்பேற்றால் தமிழக நலன் காக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை கொளத்தூரில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக பொருளாளர், "அதிமுக, பாஜக ஆட்சி தொடர அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும், எதிர்கட்சிகளை வீழ்த்த  நமது கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி மீண்டும் பொறுப்பேற்றால் தமிழக நலன் காக்கப்படும் என்று தெரிவித்த அவர், வட சென்னையின் பிரதான பிரச்னையாக உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாற்றப்படும் என்றும், மத்தியில் மீனவர்கள் நலன் காக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

திமுக கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்றே தெரியவில்லை என குறிப்பிட்ட அவர், இலங்கை தமிழர் படுகொலை உள்ளிட்ட தமிழர் விரோத கூட்டணிக்கு வாக்களிக்காதீர் என வலியுறுத்தினார். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் செய்வீர்களா... செய்வீர்களா எனக் கூறி வாக்கு சேகரித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close