நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; மீனவர்கள் கோரிக்கை

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 04:07 pm
to-raise-the-relief-amount-fishermen-request

மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும்  தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மீன் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க தடைவிதிப்பது வழக்கம். அதன் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைகாலம் இன்று முதல் (ஏப்.15) அமலுக்கு வந்துள்ளது. இந்த மீன்பிடி காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தமிழக அரசு மீனவர்களுக்கு ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கி வருகிறது. 

இதேபோல் புதுச்சேரி அரசும்,  மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு படகுகளை பழுது பார்க்கவும், வலைகளை சரி செய்யும் வேலைகளுக்காக ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கி வருகிறது. அதேபோல் தமிழக மீனவர்களுக்கும் ரூ.25 ஆயிரம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவது, விரட்டியடிப்பது தொடர்பாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close