ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மீது பணப்பட்டுவாடா புகார்!

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 03:50 pm
complaint-against-raveenthra-nath

தமிழக துணை முதலமைச்சர் மகனும்,  அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் வாக்காளருக்கு  தேர்தல் விதிமுறையை மீறி பணம் வழங்குவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரக் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கியதாகவும், வாக்காளர்களுக்கு ரூ.5000 வீதம் வழங்குவதாகவும் தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்சசெயலாளர் கணேசன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். 

மேலும், உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பணம் வழங்கிய வீடியோ ஆதரத்துடன் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கணேசன் தெரிவித்துள்ளார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close