தபால் வாக்கை விற்பனை செய்த காவலர் மீது வழக்குப் பதிவு!

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 04:08 pm
case-registered-against-a-police-about-sold-a-postal-vote

நெல்லை  மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த காவலர் தனது தபால் வாக்கை விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் காவலர் அந்தோணி சேகர். இவர் உவரி காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். திசையன்விளை பஜார் பகுதியில் 4 வது தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திசையன்விளையை சேர்ந்த முன்னாள் திமுக  நகர செயலாளர் ஜெயராஜ் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.

அவரது காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரையும், காரையும் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தபால் ஓட்டுக்கான தபால் இருந்தது. அது குறித்து விசாரித்தபோது, உவரி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் அந்தோணிசேகர் ரூ.7500 பெற்று கொண்டு ஜெயராஜிடம் தபாலை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் திசையன்விளை காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் காவலர் அந்தோணிசேகர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close