திருச்சி: ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பறிமுதல் !

  டேவிட்   | Last Modified : 16 Apr, 2019 07:53 am
trichy-gold-chain-worth-rs-3-lakhs-seized

திருச்சி விமான நிலையத்தில் பெண் ஒருவர் மறைத்து எடுத்து வந்த சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருவாரூரை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் மறைத்து எடுத்து வந்த ரரூ.3,15,767 மதிப்புள்ள 99.8  கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close