பணப்பட்டுவாடா செய்த அமமுகவினர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு!

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 09:19 am
ammk-party-members-are-handed-over-to-the-police-station

தென்சென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த அமமுக கட்சியை சேர்ந்த 2 பேரை அதிமுகவினர் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் இரவில் வீடு விடாக சென்று அமமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு  சென்ற அதிமுகவினர், அப்போது வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா ரூ.200 கொடுத்துக் கொண்டிருந்த அமமுகவை சேர்ந்த பாபு மற்றும் குமார் ஆகிய 2 பேரையும் பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா ரூ.200 வழங்கிய போது எடுத்த வீடியோ ஆதாரத்தையும் அதிமுகவினர் காவல் நிலையத்தில் வழங்கியுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஆனால் அமமுக வினர் இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close