கோவையில் பெய்யும் கோடை மழையின் அளவு குறைவாகவே இருக்கும்: வேளாண் பல்கலைகழகம்

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 09:48 am
the-summer-rains-in-coimbatore-is-low

கோவையில் இந்த ஆண்டு அதிக வெப்பநிலை நீடிப்பதால், பெய்யவிருக்கும் கோடை மழையின் அளவு சராசரியை விட குறைவாகவே இருக்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் சராசரியான அளவை விட அதிக மழை பெய்தது. 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டுமே 250 மி.மீ., கோடை மழை பதிவானது. இதனால், கோவை மக்கள் அக்னி வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பினர்.

ஆனால், இந்த வருடம், பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயில் கோவை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மார்ச் மாத கடைசி வாரத்தில் வெயில் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்ப நிலையை அடைந்து, மே மாதத்தின் முதல் வாரத்தில் கோடை மழை துவங்கும் வகையில் காலநிலை அமைந்துள்ளது. அந்த வகையில், அடுத்த மாதம் கோடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலைகழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் ராமநாதன் கூறுகையில்:- பருவ மழையைப் போல கோடை மழையை துள்ளியமாக கணிக்க இயலாது. காரணம், கோடை மழை வெப்ப சலனத்தால் பெய்கிறது. இந்த ஆண்டு சராசரி அளவைவிட அதிகபட்ச வெப்பமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரித்துள்ளதால் கோடை மழையின் அளவு சராசரி அளவான 110 மி.மீ விட குறைவாக 75 மி.மீ முதல் 80 மி.மீ அளவிற்கு 5 அல்லது 6 நாட்களுக்கு பெய்ய வாய்ப்புள்ளது என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close