தேர்தல் ஆணையம் பாஜக அரசின் ஆணைக்கிணங்க செயல்படுகிறது: ஹைதர் அலி

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 11:10 am
election-commission-is-acting-on-the-orders-of-the-bjp-government-haider-ali

தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் ஆணைக்கிணங்க செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஹைதர் அலி குற்றம்சாட்டியுள்ளார். 

சேலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் மட்டுமில்லாமல், இந்திய தேர்தல் ஆணையமும் மத்திய பாஜக அரசின் ஆணைக்கிணங்க செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஆளுங்கட்சி காவல்துறையினரின் வாகனத்திலும் அரசுத்துறை அலுவலர்களின் வாகனத்திலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாகவும், இதை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

சேலம் - சென்னை இடையிலான 8 வழி சாலை திட்டம் திட்டத்தின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எட்டு வழி சாலை அமைந்தே தீரும் என்று உறுதிபட தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் அமர்ந்து இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் எந்த ஒரு ஆட்சேபணையும் தெரிவிக்காமல் அவர் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

எனவே மீண்டும் இவர்கள் கூட்டணி ஆட்சிக்கு வருமே ஆனால் நீதிமன்றத்தின் வழிமுறைகளை எல்லாம் தகர்த்து எறிந்து விட்டு அவர்களுக்கே உண்டான அராஜக போக்கில் ஈடுபட்டு ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கி இந்த எட்டு வழி சாலை திட்டத்தை கட்டாயமாக அமைத்தே தீருவார்கள் என்றும் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close