நெல்லை: தபால் வாக்கை விற்பனை செய்த காவலர் இடை நீக்கம்!

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 02:16 pm
the-police-man-suspend-for-sold-the-postal-vote

நெல்லையில் தபால் வாக்கை விற்பனை செய்த உவரி பகுதியைச் சேர்ந்த காவலரை இடைநீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி உத்தரவிட்டுள்ளார். 

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் காவலர் அந்தோணி சேகர். இவர் உவரி காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். நேற்று திசையன்விளை பஜார் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திசையன்விளையை சேர்ந்த முன்னாள் திமுக  நகர செயலாளர் ஜெயராஜ் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.

அவரது காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரையும், அவர் பயணம் செய்த காரையும் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தபால் ஓட்டுக்கான தபால் இருந்தது. அது குறித்து விசாரித்தபோது, உவரி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் அந்தோணிசேகர் ரூ.7500 பெற்று கொண்டு ஜெயராஜிடம் தபாலை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் காவலர் அந்தோணிசேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், தபால் வாக்கை விற்பனை செய்த காவலர் அந்தோணி சேகரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close