தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துள்ளது: கே.எஸ்.அழகிரி

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 01:45 pm
election-commission-failed-ks-azhagiri

ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய தேர்தல் ஆணையம் தோல்வியுற்றதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் 6000 ரூபாய் கொடுப்போம் என்று கூறி இருக்கிறோம். காங்கிரஸின்  அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். தமிழக முதலமைச்சர் "இந்தியா" மோடியின் கையில் பத்திரமாக உள்ளது என்று கூறியிருக்கிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடியின் கையில் பத்திரமாக உள்ளார் என்பதே உண்மை.

நீட் தேர்வு மாநிலங்களுக்கு தேவை என்றால் வைத்துக்கொள்வோம். தேவை இல்லை என்றால் எடுத்து விடுவோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.  நீட் தேர்வினால் கோடான கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் இது தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார். மேலும், பாஜக- அதிமுக கூட்டணி கொள்கை அடிப்படையில் இணையவில்லை என்றும் அவசர அவசரமாக இணைந்த கூட்டம் என்றும் கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close