சேலத்தில் பதற்றமான 242 வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 02:45 pm
increase-security-at-242-polling-centers-in-salem

3288 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி பேட்டி....

சேலம் மாவட்டத்தில் 242 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சேலம் தொகுதியில் 3288 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சேலம் மக்களவை தொகுதியில் 242 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவினை வீடியோ பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும்  அனைவரும் எந்த ஒரு பயமும் இன்றி வாக்களிப்பதற்காகவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் 9 துணை ராணுவ கம்பெனியினர் மற்றும் மத்திய காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

வாக்களிப்பதற்கு பணம் வழங்கும் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக தொடர்ந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடா செய்வது பொதுமக்களுக்கு தெரியும் பட்சத்தில் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தால், ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்குள் தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கூறினார்.

மேலும், இதுவரை 6 கோடியே 8 லட்சம் ரூபாய் உரிய ஆவணம் இன்றி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருட்களும், 4.3 கிலோ தங்கங்களும், 124 கிலோ வெள்ளி பொருட்களும், 55 லிட்டர் மதுபான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.  

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close