கோவையில் 45 ஆயிரம் புதிய வாக்காளர்கள்: மாவட்ட ஆட்சியர் தகவல்

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 03:29 pm
45-000-new-voters-in-coimbatore-district-collector-information

கோவையில் புதிதாக 45 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் இராசாமணி, வாக்கு பதிவிற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவையில் 3070 வாக்கு சாவடிகள் உள்ளன. அதில் 470 வாக்குசாவடிகள் பதற்றமானதாக அறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் மைக்ரோ அப்ஸ்சர்வர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். 1880 வாக்குசாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு 68.16% வாக்குகள் பதிவானது.

இந்த தேர்தலில் 100 % வாக்குகள் பதிவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 150 பறக்கும் படையினர் களத்தில் உள்ளனர். இதுவரை 12 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் மூன்றே கால் கோடி ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா நடக்க இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close