காவல்நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு: குழப்பத்தில் போலீஸ்!

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 03:33 pm
investigative-detainee-death-at-the-police-station

கோவை கடை வீதி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கைதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கார்த்தி என்கிற தேங்காய்பால் கார்த்தி (36 ). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி வெளியே வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடை வீதி காவல் நிலையத்தினர் கார்த்தி மீது கஞ்சா விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்துள்ளனர்.

பின்னர், நீதிபதி முன் ஆஜர் படுத்துவதற்காக காவல் நிலையத்தில் இருந்து கைதியை நேற்றிரவு 9.15 மணியளவில் நீதிபதி வீட்டிற்கு அழைத்துச்செல்ல இருந்தனர். அப்போது,  கார்த்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்துபோலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கார்த்தி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் வைத்து விசாரணை கைதி இறந்ததால், இச்சம்பவம் குறித்து   நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது. மேலும் காவல்துறையினர் மத்தியில் கார்த்தி உடல்நிலைய குறைவால் தான் உயிரிழந்தாரா? அல்லது ,சயனைடு போன்று ஏதேனும் சாப்பிட்டு இறந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close