மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி குழந்தைகளுடன் வந்து மனு அளித்த கணவர்!

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 03:54 pm
husband-give-petition-about-find-their-wife

காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்து தரவேண்டும் இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த நபர், தனது குழந்தைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். 

கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஏழு வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், இன்று தன் இரு குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அவர், செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியதாவது, "கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் தன் மகனுக்கு உணவு கொண்டு சென்ற தனது மனைவி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை எனவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரியாவின் செல்போன் கடைசியாக கோவையில் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதாகவும்,  தனது மனைவியை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.  இரு குழந்தைகளும் தாயில்லாமல் அவதிப்பட்டு வருவதாகக் கூறிய அவர், தனது மனைவியை கண்டுபிடித்து தராவிட்டால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிற வேறு வழியில்லை" எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை சமாதானபடுத்திய காவல்துறையினர் இந்த மனு குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, அவரை பந்தய சாலை காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close