தேர்தல் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேட்டி

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 05:12 pm
madurai-district-collector-natarajan-interviewed

மதுரை மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்கு பதிவை, நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேட்டியளித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், தேர்தல் பணியாற்ற 269 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது, மேற்கண்ட 269 மண்டல குழுக்களுக்கான, வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்த, ஜி.பி.எஸ் கருவி பொறுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் நடராஜன், எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் பார்வையிட்டார்கள். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் : "வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்கு சாவடிக்கு சென்று விட்டதா என அறிய அந்த வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மதுரை மாவட்டத்தில் 13,533 வாக்கு சாவடி அலுவலர்களும், 3,800 காவல்துறையினரும், தேர்தல் பணியாற்ற உள்ளனர் எனவும், மதுரை மாவட்டத்தில் 1114 இடங்களில் உள்ள 2719 வாக்கு சாவடிகளில், இரவு 8 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும் என்ற அவர், ஒட்டுமொத்த வாக்கு சாவடிகளில் அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன" என்றும் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close