பணம் பட்டுவாடா செய்தபோது பிடிபட்ட அதிமுக பிரமுகர்!

  அனிதா   | Last Modified : 17 Apr, 2019 11:42 am
admk-personage-paid-to-voters

திருத்தணியில் அதிமுக கிளை செயலாளர் சக்கரபாணி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கினார். 

திருத்தணி தெக்களூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதிமுக கிளை செயலாளர் சக்கரபாணி வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக தெரிகிறது. 

இதையடுத்து, சக்கரபாணியிடம் இருந்த 7 ஆயிரத்து 850 ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சக்கரபாணியை திருத்தணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close