கோவை தொகுதியில் வாக்குப்பதிவு பணிகள் தீவிரம்!

  அனிதா   | Last Modified : 17 Apr, 2019 01:40 pm
arrangements-to-voting-machine-in-coimbatore

கோவையில், மக்களவை தேர்தலையொட்டி, வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின், 17வது மக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில், வாக்களிப்பதற்கான இயந்திரங்கள், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பாதுகாப்பு அலுவலர்களை ஒருங்கிணைக்கும் பணி, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள, பி.ஆர்.எஸ். மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், வாக்குச்சாவடிக்கு தேவையான இயந்திரங்கள், பாதுகாப்பு பணியாளர்களை அனுப்பும் வாகனங்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, அவினாசி, உடுமலைப்பேட்டை என 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு  மொத்தம் 189 வாகனங்கள் உள்ளன.

இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. மறுபுறம், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் பணியாற்றும் அலுவலர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ்.,  மாணவர்கள், ஓய்வுப்பெற்ற இராணுவ வீரர்கள், காவல்துறையினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close