விரல் மை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் இலவசம்!

  அனிதா   | Last Modified : 17 Apr, 2019 03:40 pm
parking-fee-is-free-if-your-finger-is-showing-up

கோவையில் உள்ள பிரபல ப்ரோஜோன் மாலில் வாக்களித்ததன் அடையாளமாக விரல் மையை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் இலவசம் என  அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை சரவணம்பட்டியில் பிரபல ப்ரோஜோன் மால் இயங்கி வருகிறது. நாளை மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மாலை 6 மணி வரை மால் மூடப்படும் என்று மால் நிர்வாகம் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,  நாளை (18 -04 -19 ) மாலை 6  மணி முதல் அடுத்த நாள் (19 -04 -19 ) மாலை 6 மணி வரை மாலுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனவும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தி வந்த நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கோவையில் உள்ள மால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தில் உள்ள சரவண பவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் உணவு விடுதிகளில் வாக்களிக்கும் அனைவருக்கும் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு உணவு விடுதிகள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close