சங்கரன்கோவில் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு! 2 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 01:14 pm
sankarankovil-evm-machine-repaired

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குப்புதூரில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்தனர். 

சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறினால் வாக்குப்பதிவு தாமதமானது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குப்புதூரில் 270வது வாக்குசாவடியில்  வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் காலை 9.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் வெகுநேரம் வெயிலில் வரிசையில் காத்திருந்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close