கோவையில் முதன்முறையாக வாக்களித்த 59 பேர்

  ராஜேஷ்.S   | Last Modified : 18 Apr, 2019 03:58 pm
59-people-who-voted-for-the-first-time-in-coimbatore

கோவை ஈரநெஞ்சம் காப்பகத்தில் வசித்து வரும் 59 ஆதரவற்ற முதியவர்கள் இந்த மக்களவை தேர்தலில் முதன்முறையாக இன்று வாக்களித்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் 60 வயது முதல் 90 வயது வரையிலான 5 ஆண்கள் மற்றும் 54 பெண்கள் என மொத்தம் 59 முதியவர்கள் வசித்து வருகின்றனர்.

பல்வேறு காரணங்களால் தனிமைப்படுத்தப்பட்டு ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வரும் இவர்கள் இந்த மக்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்களித்தனர். 

அறக்கட்டளையை சேர்ந்த மகேந்திரனின் முயற்சியால் வாக்களிப்பது என்றால் என்னவென்றே தெரியாத பலரும், பல ஆண்டுகளாக வாக்காளர் அடையாள அட்டை இல்லாம இருந்தவர்களும் இன்று ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

நடக்கமுடியாத முதியவர்கள் சக்கர நாற்காலி மூலமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். 
நீண்டநாட்களாக முடக்கப்பட்டிருந்த உரிமையை மகேந்திரன் மீட்டுக்கொடுத்துள்ளதாக அங்குள்ள முதியவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close