108 திவ்ய தேசங்களில் மூன்றாவதாக போற்றப்படக்கூடிய கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவிலில், சித்திரைப் பெருவிழா, கடந்த 11 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் சாரங்கராஜா ஸ்ரீதேவி, பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் தங்கஇந்திர விமானத்திலும், வெள்ளி சூரியபிரபையில், வெள்ளி சேஷவாகனம்,ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தங்ககருட வாகனம், வெள்ளி அனுமந்தவாகனம் , வெள்ளியானைவாகனம், பின்னைமர வாகனம் , தங்ககுதிரை வாகனம் ஆகியவற்றில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
இத்திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியாக இன்று பெரிய திருதேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் சாரங்கராஜா ஸ்ரீதேவி, பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், நாளை பத்தாம் நாள் ஸப்தாவர்ணம் 81 கலச ஸ்தாபனம் திருமஞ்சனம் நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் உதவி ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
newstm.in