லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 09:00 am
murugan-temple-function

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள‌ அருள்மிகு ஸ்ரீபாலமுருகனுக்கு 52 ம் ஆண்டு  சித்ராபௌர்ணமி திருவிழா நடைபெற்றது.   இவ்விழாவில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாத்துரை ஊராட்சியில் உள்ள, அகிலாண்டபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு 52 வதுஆண்டாக சித்ரா பௌர்ணமி திருவிழாகொண்டாடப்பட்டது.
 
இவ்விழாவிற்காக 7 ந்தேதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு திருவிழாதொடங்கியது. 2 ம் நாள் மாரியம்மனுக்கு குளுமை  அபிஷேகம் நடைப்பெற்றது. சித்ராபௌர்ணமியன்று மாலை கொள்ளிடம் தென்கரையிலிருந்து அப்பகுதி மக்கள் பால்காவடிகள், அலகு குத்துதல்,தேர்அலகு,பிளேன் அலகு,வருவான் வடிவேல்அலகு என 100 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பிராத்தனை நிறைவேற்றிட்ட அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து  வீதி ஊர்வலம் வந்து சன்னதியை அடைந்தனர்.
 
பின்னர் இரவு 11 மணிக்கு மேல்  கோயில்முன்புறம் அமைத்திருந்த அக்னி குண்டம் இறங்கும் வைபோகம் நடைபெற்றது. அதனையடுத்து நிறைவு நாளான வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (நாளை) விடையாற்றி அபிஷேகம்செய்து விழா நிறைவடைகிறது. இவ்விழாவில் 1000 க்கும் மேற்பட்டபொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close