திருச்சியில் குடும்பதகராறில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 09:30 am
mother-suicide-with-children-in-trichy

திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடும்பதகராறில் தீக்குளித்து இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா,  தா.பேட்டை அடுத்த ஊருடையாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பன்னீர்செல்வம். இவருக்கு நாகராணி (30) என்கிற மனைவியும், குணா (10), சந்தோஷ் (7) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் ஊருடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில், மனைவி நாகராணி வேலைக்கு செல்வது பன்னீர்செல்வத்திற்கு விருப்பம் இல்லாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த நாகராணி நேற்று முன்தினம் தனது வீட்டில் மகன்கள் குணா, சந்தோஷ் ஆகியோர் உடலிலும், தனது உடம்பிலும் மண்ணென்னை ஊற்றி தீ வைத்து கொண்டார்.  

பின்னர், நாகராணியின் வீட்டில் இருந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட, அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு  நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றுள்ளனர்.  இதில் சிறுவன் குணா சிகிச்சை பலனின்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தான்.  நாகராணி, சந்தோஷ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுமுன் தினம் இரவு நாகராணி இறந்துபோனார்.

தொடர் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சந்தோசும் நேற்று காலை பரிதபமாக இறந்து போனான். சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்பதகராறு காரணமாக மூன்று பேர் பரிதாபமாக இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close