மரணத்தில் மர்மம்: சடலத்தை வைத்து போராட்டம்

  ராஜேஷ்.S   | Last Modified : 20 Apr, 2019 07:23 pm
mystery-in-death-fight-with-the-corpse

சேலம் அரசு மருத்துவமனை முன்பு இறப்பில் மர்மம் உள்ளதாகவும், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு உறவினர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் ரிக்வண்டி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் ரிக்வண்டி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 18ம் தேதி வெங்கடாசலம் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் அவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில்,  உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு இன்று வருகை தந்தபோது, இறந்த வெங்கடாஜலத்தின் மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு உள்ள சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் வெங்கடாசலம் உடலை ஆம்புலன்சில் வைத்து கொண்டு, இறப்பில் மர்மம் உள்ளதாகவும், அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, உடலை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் தகவலறிந்து வந்த சேலம் டவுன் காவலர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திடீரென சேலம் அரசு மருத்துவமனை முன்பு இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close