கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் !

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 05:16 pm
summer-special-training-camp-in-palayamkottai

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகளுக்கு வாலிபால், கபடி, கொக்கோ உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில், ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை கால விடுமுறையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

தீயணைப்பு துறை, வனத் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கவும், சமுதாய அக்கறையுடன் அவர்களுக்கு முதலுதவி செய்யவும் தேவையான பயிற்சிகள் இந்த முகாமில் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 பயிற்சி வகுப்புகளை மாவட்ட விளையாட்டு அதிகாரி ஜெயசித்ரா அன்புசெல்வன் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், வாலிபால் சங்கமும் இணைந்து மாணவ - மாணவிகளுக்கு வாலிபால் பயிற்சியினை வழங்குகின்றன.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close