கோவையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் 

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 01:17 pm
the-unidentified-male-body-in-covai

கோவை க.க.சாவடி அருகே முள்புதர் அருகில் அடையாளம் தெரியாத ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அருகில் இருந்தவர்கள் க.க. சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.  அங்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரனையில் தூக்கில் தொங்கியவர் மேற்கு வங்க மாநிலம், பிர்பாரா மாவட்டத்தை சேர்ந்தவர் பெயர் ஸ்வேரன் மார்க்ஸ் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் தூக்கில் தொங்கியவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால், யாராவது அடித்து கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்றும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மேலும்,  இவர் எதற்காக கோவை வந்தார்? எங்கு தங்கியுள்ளார்? என்ற விபரங்கள் தெரியவில்லை. இது தொடர்பாக, க.க. சாவடி காவல் நிலைய இன்பெக்டர் மனேஜ் குமார்  தலைமையில் தனிபடை அமைத்து விசாரித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close