கோவையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 02:08 pm
the-body-organs-of-the-youth-were-donated-in-coimbatore

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைசாவடைந்த 25 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்யப்பட்டது.

கடந்த 13ம் தேதி மனோஜ் குமார் (25) என்பவர் வேலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது வாகனம் விபத்துக்குள்ளாகியது. இதில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை, தொடர்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனோஜ் குமாருக்கு நெருக்கடி நிலைக் கண்காணிப்பு பிரிவுக் குழுவும், நரம்பியல் மருத்துவர்களும் இணைந்து மிகத் தீவிரமாக சிகிச்சை அளித்தனர்.

இருந்தபோதிலும், மூளையில் அடிபட்டிருந்த காரணத்தால் அவர் குணமடைவதில் பின்னடைவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தார். மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கண்டறியும் 'அப்னோ டெஸ்ட்' பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட மருத்துவர் குழு இறுதியில் அவரது மூளைச்சாவை உறுதி செய்தனர். 

அதனையடுத்து, மனோஜ்குமாரின் உடல் நிலையை அறிந்த அவரது குடும்பத்தினர், உடல் உறுப்பு தானம் வழங்க முன்வந்தனர். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை ஆறு பயனாளிகளுக்குத் தானமாக வழங்க முடிசெய்யப்பட்டது.

இதன்மூலம், பயனாளிகளின் வாழ்வில் நன்மை செய்ய முடியும் என்பதால் உறுப்பு தானத்துக்கான தமிழக அமைப்பின்(TRANSTAN) அனுமதி பெறப்பட்டு ராமகிருஷ்ணா மருத்துவமனை நோயாளி ஒருவருக்கு அவரது ஒரு சிறுநீரகமும் மற்ற உறுப்புகள் அரசு விதிகளின்படி அமைந்த பயனாளிகளுக்கும் பொருத்தப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close