தனியார் இருசக்கர டாக்சி வேண்டாம்: ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 03:49 pm
do-not-have-a-private-bike-taxi-auto-drivers-demand-the-government

தனியார் இருசக்கர டாக்சிகளை அனுமதிக்க கூடாது என ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே சில கால் டாக்சிகளில், ஆட்டோவை விட கட்டணம் குறைவு என்பதால் மக்கள் ஆட்டோவிற்கு பதில் கால் டாக்சிகளையே அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிடம் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் ராபிட்டோ இருசக்கர டாக்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் மேலும் கேள்வி குறியாகும் அதனால் தனியார் இருசக்கர டாக்சிகளுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும். மேலும் ஓன் போர்டு வாகனங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என கோவை ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close