மின்சாரம் பாய்ந்ததில் யானை பலி 

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 10:18 am
elephant-death-due-to-the-electricity-struck-in-coimbatore

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒரு பாக்குத் தோட்டத்தில்,  வயது முதிர்ந்த ஒரு ஆண் யானை பாக்குமரத்தை உடைத்துத் தள்ளும்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

கோவை, மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட‌, நெல்லித்துறை காப்புக்காடு எல்லையில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள‌ இராணிமகால்காரர் பாக்குத் தோட்டத்தில்,இன்று அதிகாலையில்,  வயது முதிர்ந்த ஒரு ஆண் யானை பாக்குமரத்தை உடைத்துத் தள்ள முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக‌ அந்த உடைந்த பாக்கு மரம், தோட்டத்தை ஒட்டி செல்லும் மின்கம்பி மேல் விழுந்துள்ளது.

அந்த மரத்தை யானை கீழே அழுத்தியபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக பலியானது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வன சரகர் மற்றும் பணியாளர்கள் யானையின் மரணம் குறித்து தணிக்கை செய்தனர். பின்னர், கால்நடை மருத்துவர்களை கொண்டு, NGO முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close